விநாயகர் சதுர்த்தி எதிரொலி !ஈரோட்டில் தொடரும் கைது நடவடிக்கை
விநாயகர் சதுர்த்தி ஆண்டுதோறும் ஆவணி மாதத்தின் வளர்பிறை சதுர்த்தி நாள் அன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு வருகிற 2-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.விநாயகர் சதுர்த்தி விழா தமிழகத்தில் உள்ள ஈரோட்டில் மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் ஈரோடு மாவட்ட போலீஸ் சார்பில் விநாயகர் சதுர்த்தி அமைதியான முறையில் நடத்திட பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. போலீசார் கடந்த சில நாட்களாக நாட்களாக இரவு பகல் என்று பாராமல் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பழைய குற்றவாளிகளின் நடவடிக்கைகளை தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.மேலும் முன்னெச்சரிக்கையாக பழைய குற்றவாளிகள் 152 பேர் கைது செய்துள்ளனர் போலீசார்.