தொடர் மழை எதிரொலி ! எந்தெந்த மாவட்டங்களுக்கு விடுமுறை ?

தொடர் மழை காரணமாக 3 மாவட்டங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து உள்ளது.இதன்காரணமாக பல்வேறு இடங்களில் கனமழை மழை பெய்து வருகிறது.இந்தநிலையில் கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் 4 தாலுகாவில் பள்ளி – கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி உதகை, குந்தா, குன்னூர், கோத்தகிரி ஆகிய 4 தாலுகாவில் விடுமுறை அறிவிப்பு வெளியிட்டுள்ளார் மாவட்ட ஆட்சியர் இன்னொசென்ட் திவ்யா.
கனமழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார் . கொடைக்கானல் தாலுகா பகுதிகளில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழை காரணமாக தூத்துக்குடி மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு 2-ஆவது நாளாக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது . ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை மற்றும் குமரி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.