நிவர் புயல் எதிரொலி! வேல் யாத்திரை ரத்து! – எல்.முருகன்

நிவர் புயல் காரணமாக பாஜக சார்பில் நடைபெறும் வேல் யாத்திரை ரத்து செய்யப்படுவதற்காக தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறியுள்ளார்.
தமிழகத்தில் பாஜக சார்பில், அரசின் தடையை மீறி, வேல் யாத்திரை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், புயலின் தீவிரம் அதிகரித்து வருகிற நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இன்று தமிழகம் முழுவதும் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, பாஜக சார்பில் நடைபெற்று வந்த வேல் யாத்திரையும் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் அவர்கள் கூறுகையில், நிவர் புயல் காரணமாக பாஜக சார்பில் நடைபெறும் வேல் யாத்திரை ரத்து செய்யப்படுகிறது என்றும், டிச.4-ம் தேதி ஆறுபடை வீடுகளில் வழிபாடு செய்த பின், டிச.5ம் தேதி திருச்செந்தூரில் நிறைவுநிகழ்ச்சி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025