நிவர் புயல் எதிரொலி : கடலூர் முழுவதும் மின்சாரம் நிறுத்தம்.!
நிவர் புயல் கரையை தொட தொடங்கியுள்ளதால் பலத்த காற்று மற்றும் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.எனவே கடலூரில் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.
வங்க கடலில் உருவான நிவர் புயலானது தற்போது கடலூரிலிருந்து 90கிலோ மீட்டர், புதுச்சேரியில் இருந்து 150கிலோ மீட்டர் ,சென்னையில் இருந்து 220கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது .தற்போது 16 கி.மீ. வேகத்தில் கரையை நோக்கி நகரும் நிவர் தற்போது அதிதீவிர புயலாக மாறியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த அதிதீவிர புயலின் தீவிரம் இன்று இரவு 8 மணி முதல் அதிகரிக்கும் என்றும்,இது வடமேற்கு திசையில் நகர்ந்து கரையை கடக்க கூடும் என்றும்,அதன் ஒரு பகுதி இன்று இரவு 8 மணிக்கு புதுச்சேரி அருகே கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும் நிவர் புயல் தற்போது அதிதீவிரமாக வலுப்பெற்று கரையை தொட தொடங்கியுள்ளதால் கடலூர் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.மேலும் அதிதீவிரமாக வீசும் புயலால் கனமழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது.எனவே கடலூர் முழுவதும் மின்சாரம் நிறுத்தப்பட்டுள்ளது.