லெபனான் தலைநகர் பைரூட் துறைமுகத்தில் அமோனியம் நைட்ரேட் கிடங்கில் இருந்த 2,750 டன் அளவு அமோனியம் நைட்ரேட்டால் விபத்து ஏற்பட்டதாகவும், இந்த வெடி விபத்தில் 100-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், 4000-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக உள்ளதா..?என்ற சந்தேகம் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்து சுங்கத்துறை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
அதில், சென்னையில் அமோனியம் நைட்ரேட் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. அமோனியம் நைட்ரேட் குறித்து பொதுமக்கள் அச்சப்படத் தேவையில்லை. ஆறு ஆண்டுகளாக பறிமுதல் செய்யப்பட்ட அமோனியம் நைட்ரேட் மணலி சுங்கத்துறை கிடங்கில் பாதுகாப்பாக உள்ளது. மணலி சுங்கத்துறை கிடங்கைச் சுற்றி வீடுகள் எதுவும் இல்லை என சென்னை சுங்கத்துறை விளக்கம் கொடுத்துள்ளது.
விவசாயத்திற்கு உரம் தயாரிக்கவும், வெடி மருந்து தயாரிக்கவும் அமோனியம் நைட்ரேட் அதிக அளவில் பயன்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதும் ஐபிஎல் போட்டி சென்னை சேப்பாக்கம்…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடின. சென்னை சேப்பாக்கத்தில்…
சென்னை : கடந்த ஏப்ரல் 22-ல் காஷ்மீர் பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் விளையாடி வருகின்றன. சென்னை…
சென்னை : கத்தோலிக்க சபையின் 266-வது திருத்தந்தையாக 2013 மார்ச் 13 முதல் பதவி வகித்த போப் பிரான்சிஸ் கடந்த…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் எம்.எஸ்.தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், பாட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ்…