கஜா புயல் எதிரொலி..! தனுஷ்கோடிக்கு செல்ல தடை ..!ஆட்சியர் வீரராகவ ராவ் அறிவிப்பு
கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி மறுப்பு என்று ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் கூறுகையில், கஜா புயல் முன்னெச்சரிக்கையாக இன்று மாலை 5 மணியிலிருந்து தனுஷ்கோடிக்கு செல்ல அனுமதி கிடையாது. காற்றின் வேகத்தை பொறுத்து பாம்பன் பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதிக்கலாமா என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருகிறது.அதேபோல் இந்திய கடலோர காவல் படை வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர், கடற்பரப்பில் 2 ஹெலிகாப்டர்கள் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளது என்றும் ராமநாதபுரம் ஆட்சியர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.