கனமழை எதிரொலி: எந்தெந்த மாவட்டங்களில் இன்று பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை?

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி இலங்கை கடலோரப் பகுதிகளையொட்டி தற்போது நிலை கொண்டுள்ளது.இதன் காரணமாக தமிழகத்தில் விடிய விடிய கன மழை பெய்து வருகிறது சில மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் எச்சரிக்கையையும் விடப்பட்டுள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் 28 மாவட்டங்களில் உள்ள கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நாமக்கல், சிவகங்கை, கரூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது.இதில் திருப்பத்தூர் மாவட்டத்தில் 8ம் வகுப்பு வரை மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
சென்னை, அரியலூர், திருவள்ளூர், பெரம்பலூர், காஞ்சிபுரம், கடலூர், செங்கல்பட்டு, புதுக்கோட்டை, மயிலாடுதுறை, திருவண்ணாமலை, திருவாரூர், சேலம், நாகை, கள்ளக்குறிச்சி, தஞ்சை, ராணிப்பேட்டை, ராமநாதபுரம், திருச்சி, வேலூர், மதுரை, விழுப்புரம், தேனி, திண்டுக்கல் ஆகிய 24 மாவட்டங்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாட்களுக்கு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
நெருங்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு..சென்னையில் வெளுத்து வாங்கும் கனமழை!
December 19, 2024
மும்பை படகு விபத்து : 13 பேர் பலி, 101 பேர் மீட்பு! மகாராஷ்டிரா முதலமைச்சர் தகவல்!
December 18, 2024
லோகேஷ் கனகராஜை கதறவிட்ட பாரத்! வெளியான சி(ரி)றப்பான வீடியோ இதோ…
December 18, 2024
“நாங்கள் அம்பேத்கருக்கு எதிரானவர்கள் அல்ல.,” அமித்ஷா விளக்கம்!
December 18, 2024