சென்னையில் கனமழை எதிரொலி : மூடப்பட்டுள்ள சாலைகள் விபரம் இதோ…!
சென்னையில் கனமழை எதிரொலியால், 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளதையடுத்து, 7 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக, பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக சென்னையில் கனமழை காரணமாக சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் நிலையில், வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மேலும் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால், மக்களின் இயல்பு வாழ்க்கை பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது.
இந்நிலையில், சென்னையில் கனமழை எதிரொலியால், 11 சுரங்கபாதைகள் மூடப்பட்டுள்ளதையடுத்து, 7 சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
மூடப்பட்டுள்ள சுரங்கபாதைகள் விபரம் :
- வியாசர்பாடி சுரங்கப்பாதை
- கணேஷபுரம் சுரங்கப்பாதை
- அஜாக்ஸ் சுரங்கப்பாதை
- கெங்குரெட்டி சுரங்கப்பாதை
- மேட்லி சுரங்கப்பாதை
- துரைசாமி சுரங்கப்பாதை
- பழவந்தாங்கல் சுரங்கப்பாதை
- அரங்கநாதன் சுரங்கப்பாதை
- வில்லிவாக்கம் சுரங்கப்பாதை
- காக்கன் சுரங்கப்பாதை
ஆகிய சுரங்கப்பாதைகள் மூடப்பட்டுள்ளன.
போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ள சாலைகள் விபரம் :
- கே.கே.நகர் – ராஜமன்னார் சாலை,
- மயிலாப்பூர் – டாக்டர் சிவசாமி சாலை,
- ஈவிஆர் சாலை – காந்தி இர்வின் சந்திப்பு முதல் டாக்டர் நாயர் பாலம் வரை,
- செம்பியம் – ஜவஹர் நகர்,
- பெரவள்ளூர் – 70 அடி சாலை,
- புளியந்தோப்பு – டாக்டர் அம்பேத்கர் சாலை,
- புளியந்தோப்பு நெடுஞ்சாலை,
- பெரம்பூர் பெரக்ஸ் ரோடு,
- பட்டாளம் மணி கூண்டு,வியாசர்பாடி – முல்லை நகர் பாலம்
ஆகிய பகுதிகளில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. ஆகையால், இந்த மார்க்கத்தில் பயணம் செய்வோர் மாற்றுப் பாதையை தேர்ந்தெடுக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.