கனமழை எதிரொலி..! 8 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!
தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது. அதன்படி, இந்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் இன்று 4 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழ்நாட்டில் இன்று மிக கன மழைக்கு வாய்ப்பு 5 நாட்கள் கனமழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கனமழை எதிரொலியால் நேற்று தமிழகத்தில் கடலோர மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
ஆரஞ்ச் அலர்ட்..! நாளை இந்த 4 மாவட்டங்களில் வாய்ப்பு..!
இந்த நிலையில்,மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, நாகை, மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல், திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
புதுக்கோட்டையில் கந்தர்வகோட்டை, கறம்பக்குடி தாலுகாவுக்கு உட்பட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் கன மழை காரணமாக கொடைக்கானல் வட்டத்திற்குட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், முதல் மற்றும் 2ம் ஆண்டு ஐடிஐ மாணவர்களுக்கும் இன்று தேர்வு நடைபெறவிருந்த நிலையில், கனமழை எதிரொலியால் இந்த தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. dte.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.