கனமழை எதிரொலி : பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.!
கனமழை எதிரொலியால், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பருவமழை தொடங்கியுள்ள நிலையில், பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால், சாலைகளில் வெல்ல நீர் தேங்கியுள்ள நிலையில், வீடுகளுக்குள்ளும் மழைநீர் புகுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கிறது. இதனால் மக்களின் இயல்புவாழ்க்கை பாதிப்புக்குளாகி உள்ளது.
இந்நிலையில், கனமழை எதிரொலியால், 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விழுப்புரம், கடலூர், திருவண்ணமலை, தஞ்சை, மயிலாடுதுறை, சேலம், கரூர், திருப்பத்தூர், சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.