கனமழை எதிரொலி : செம்மஞ்சேரி காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம்..!

Published by
லீனா

பொதுமக்கள் வசதிக்காக, செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளது.

சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.

குறிப்பாக சென்னையில், வெள்ளப்பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ளநிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இக்காட்டான சூழலில் காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் அனைவரும் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக, செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக இடமாற்றம்  செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை, J-10 செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் சாலை, முகமது சதக் கல்லூரிக்கு எதிர்புறம், எண்.14/17, முதல் தளம் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டு இயங்கிவருகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.

பொதுமக்கள் அவசர உதவிக்கு J-10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீனிவாசன், கைபேசி எண் 94438-08523 மற்றும் செம்மஞ்சேரி காவல் நிலைய கைபேசி எண் – 94981 00172 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recent Posts

“2026 தேர்தல் முக்கியம்., ரிப்போர்ட் கார்டு வேண்டும்!” மு.க.ஸ்டாலின் திட்டவட்டம்!

சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…

8 hours ago

கூகுள் குரோம் பயனர்களே உஷார்! எச்சரித்த மத்திய அரசு!

டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…

10 hours ago

மாணவர்களை கால் அழுத்திவிட கூறிய ஆசிரியர்! சஸ்பெண்ட் செய்த கல்வி அதிகாரி!

சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…

10 hours ago

நாளை தவெக தலைவர் விஜய் வைக்கும் விருந்து! யார் யாருக்கு தெரியுமா?

சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…

11 hours ago

“மீனவர்கள் ஆழ்கடலுக்குச் செல்ல வேண்டாம்” – வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

11 hours ago

அதானி குழுமத்திற்கு எதிராக ஆஸ்திரேலியாவில் ‘இனவெறி’ புகார்!

ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…

11 hours ago