கனமழை எதிரொலி : செம்மஞ்சேரி காவல் நிலையம் தற்காலிகமாக இடமாற்றம்..!
பொதுமக்கள் வசதிக்காக, செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், பல மாவட்டங்களில் சாலைகளில் மழைநீர் தேங்கிய நிலையில், சாலைகள் வெள்ளக்காடாக காட்சியளித்தது. மேலும், வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால், மக்களின் இயல்புவாழ்க்கை பெரும் பாதிப்புக்கு உள்ளானது.
குறிப்பாக சென்னையில், வெள்ளப்பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது. இதனால், தாழ்வான பகுதிகளில் வசித்த மக்கள் வெள்ளநிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த இக்காட்டான சூழலில் காவல்துறையினர், சுகாதார பணியாளர்கள் அனைவரும் முழுவீச்சுடன் செயல்பட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பொதுமக்கள் வசதிக்காக, செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்தி குறிப்பில், ‘சென்னை, J-10 செம்மஞ்சேரி காவல் நிலையம் பொதுமக்கள் வசதிக்காக தற்காலிகமாக சோழிங்கநல்லூர் – மேடவாக்கம் சாலை, முகமது சதக் கல்லூரிக்கு எதிர்புறம், எண்.14/17, முதல் தளம் என்ற முகவரிக்கு மாற்றப்பட்டு இயங்கிவருகிறது என்பதை இதன் மூலம் தெரிவித்துக் கொள்கிறோம்.
பொதுமக்கள் அவசர உதவிக்கு J-10 செம்மஞ்சேரி காவல் நிலைய ஆய்வாளர் திரு.சீனிவாசன், கைபேசி எண் 94438-08523 மற்றும் செம்மஞ்சேரி காவல் நிலைய கைபேசி எண் – 94981 00172 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.