வரி ஏய்ப்பு புகார் எதிரொலி : பிரபல உணவகங்களில் சோதனை….!!
சரவண பவன், அஞ்சப்பர் உள்ளிட்ட உணவகங்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள் வீடுகளில் வருமான வரித் துறையினர் தொடர்ந்து சோதனை நடத்தி வருகின்றனர்.
பிரபல உணவு விடுதிகளான சரவண பவன், அஞ்சப்பர், ஹாட் பிரட்ஸ், கிராண்ட் ஸ்வீட்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாக வருமான வரித்துறையினருக்கு புகார்கள் வந்துள்ளது. அதனடிப்படையில், இன்று காலை 8 மணி முதல் அந்த உணவு விடுதிகள் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். இச்சோதனையில் 100க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக, தமிழகம் முழுக்க 32 இடங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ளனர். சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றி ஆய்வு செய்து வருகின்றனர்.