எளிமையான திருமணம்.! ஆன்லைனில் ஆசீர்வதித்த உற்றார் உறவினர்கள்!

Default Image

தஞ்சையில், ஊரடங்கை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப உதவியோடு உற்றார் உறவினர்களை ஜூம் ஆப் மூலம் இணையத்தில் இணைத்து அவர்கள் முன்னிலையில் எளிய முறையில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்டனர்.

கொரோனா முன்னெச்செரிக்கையாக மார்ச் 24 முதல் ஊரடங்கு அறிவிக்கப்பட்டு அது மே மாதம் 3ஆம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால், கல்யாணம் போன்ற சுப நிகழ்வுகள் என பலநிகழ்ச்சிகள் தள்ளிவைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், தஞ்சையில் இந்த ஊரடங்கை கருத்தில் கொண்டு தொழில்நுட்ப உதவியோடு உற்றார் உறவினர்களை ஜூம் ஆப் மூலம் இணையத்தில் இணைத்து அவர்கள் முன்னிலையில் எளிய முறையில் இளம் ஜோடி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு வரவேற்ப்பை பெற்று வருகிறது.

தஞ்சாவூர், பெரியார் மணியம்மை பல்கலைக்கழக பேராசிரியை வளர்மதி தனது மகள் வெண்பாவுக்கு, புதுச்சேரியை சேர்ந்த சந்திரபாண்டியன் என்பவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டு திருமண தேதியும் இரண்டு மாதங்களுக்கு முன்னரே  முடிவெடுக்கப்பட்டது. பின்னர் ஊரடங்கு காரணமாக தொழில்நுட்ப உதவியோடு திருமணம் நடத்த முடிவு செய்து அதனை செயல்படுத்தி காண்பித்துவிட்டனர்.

ஜூம் ( ZOOM) செயலியில் காணொலிக்காட்சி வாயிலாக திராவிடர் கழக பொதுச்செயலாளர் கலி. பூங்குன்றன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்தார். திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி வாழ்த்துரை வழங்கினார். மற்ற உற்றார் உறவினர்கள் ஜூம் செயலி மூலம் திருமணத்தை கண்டுகளித்தனர். இணைய வாயிலாக ஆசீர்வாதங்களையும், வாழ்த்துக்களையும் வழங்கினர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 30042025
mk stalin
Santhanam DD Next level trailer
Premalatha Vijayakanth
premalatha vijayakanth
Kolkata FireAccident
Manjolai - TN Govt