ஈஸ்டர் திருநாளை முன்னிட்டு, டிடிவி தினகரன் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
நாளை நாடு முழுவதும் ஏசுபிரான் உயிரித்தெழுந்த திருநாளான ஈஸ்டர் திருநாள் கொண்டாடப்பட உள்ளது. இதனையடுத்து, டிடிவி தினகரன் அவர்கள் கிறிஸ்தவ மக்களுக்கு வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், ‘மனித குலத்திற்கு நற்போதனைகளை அளித்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த ஈஸ்டர் திருநாளைக் கொண்டாடும் கிறிஸ்தவ சகோதர, சகோதரிகளுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். பகையாலும், சிலுவை துரோகத்தாலும் சுமந்த இயேசுபிரான் உயிர்த்தெழுந்த திருநாள், எல்லாருக்கும் புதுவாழ்வைத் தந்திடும் நன்னாளாக அமையட்டும்;
மனிதகுலத்தைச் சூழ்ந்த துன்பங்கள் அனைத்தும் விலகட்டும். அன்புதான் உலகின் பெரும்சக்தி என்பதைப் போதித்த யேசுதாதரின் போதனைகளை என்றும் நம் நெஞ்சில் நிறுத்தி செயல்படுவோம். ஈஸ்டர் திருநாள் அனைவருக்கும் மகிழ்ச்சியைக் கொண்டு வந்து சேர்க்கட்டும்; அந்த மகிழ்ச்சி எந்நாளும் நிலைக்கட்டும் என வாழ்த்துகிறேன்.’ என தெரிவித்துள்ளார்.
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் ஏற்கனவே நடைபெற்ற முதல் போட்டியை…
சென்னை : தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுத்து அடுத்ததாக ஒரு சில தோல்வி படங்களை கொடுத்து அடையாளம் தெரியாத…
டெல்லி : மாநிலத்தில் உள்ள 70 தொகுதிகளுக்கும் கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்றது. இந்த…
கட்டாக் : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டி20 தொடர், 3 போட்டிகள்…
ஈரோடு : கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது. ஆளும் திமுக கட்சியினர் வேட்பாளர் வி.சி.சந்திரகுமாரை எதிர்த்து…
ஒடிஷா : இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது ஒரு நாள் போட்டி நாளை ( பிப்ரவரி 9) -ஆம் தேதி ஒடிஷா…