நில அதிர்வு – மக்கள் அச்சப்பட வேண்டாம் – மாவட்ட வருவாய் அலுவலர்

Default Image

ஆய்வு மேற்கொள்ளும் போதே சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் தகவல்.

நில அதிர்வு தொடர்பாக மக்கள் யாரும் அச்சப்பட வேண்டும் என்று வேலூர் மாவட்ட வருவாய் அலுவலர் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். நில அதிர்வால் பாதிக்கபட்ட வீடுகளில் இருந்தவர்களை முகாம்களில் தங்கவைக்க நடவடிக்கை எடுக்கப்படும் வேண்டும் என்றும் ஆய்வு மேற்கொள்ளும் போதே சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்தோம் எனவும் கூறினார்.

இதனிடையே, வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே பேரணாம்பட்டுவில் இன்று காலை 9.30 மணி அளவில் அடுத்தடுத்து 2 முறை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. சுமார் 3 வினாடிகள் நில அதிர்வு நீடித்ததாக அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.

ஏற்கனவே பேரணாம்பட்டு சுற்று வட்டாரத்தில் கடந்த நவம்பர் 29 மற்றும் டிசம்பர் 23ல் நில அதிர்வு உணரப்பட்ட நிலையில், மீண்டும் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் தொடர்ந்து மூன்றாவது முறையாக நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்