தமிழ்நாட்டில் நிலநடுக்கம்.. கிராம மக்கள் பதற்றம்! எங்கு தெரியுமா?
கிருஷ்ணகிரியில் இன்று பகல் 1.32 மணிக்கு பூமிக்கு அடியில் 5 கி.மீ. ஆழத்தில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி :தமிழ்நாட்டில் இன்று (09-11-2024) மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஆம், கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம் பள்ளியில் மதியம் 1.30 மணியளவில் பூமியின் 5 கி.மீ ஆழத்திற்கு மையம் கொண்டிருந்த இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3ஆக பதிவாகியுள்ளது.
இதனையடுத்து, இது தொடர்பாக கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் சார்பாக, விசாரணை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி, சென்னை வானிலை ஆய்வகம் நிலநடுக்கத்தை உறுதி செய்தது.
இந்நிலையில், பீதியடைந்த பொதுமக்கள் வீடுகளை விட்டு, வெளியேறி சாலையில் தஞ்சம் அடைந்ததாகவும், ஆனால் உயிர் சேதம் அல்லது பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை எனவும் கூறப்படுகிறது.