இ-பதிவு இணையதளம் முடக்கம்- அமைச்சர் விளக்கம்..!

Default Image
  • ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய இணைய தளத்திற்கு வந்த காரணத்தால் தான் இணையதளம் முடங்கியது.
  • விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்தார்.

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக தமிழகத்தில் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இந்த ஊரடங்கு இன்று காலையுடன் நிறைவடைந்த நிலையில், தற்போது ஜூன் 14-ஆம் தேதி வரை தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

இதன் காரணமாக எலக்ட்ரீசியன், பிளம்மர், கணினி பழுது , மோட்டார் வாகனம் பழுது பார்ப்பவர்கள், கார்பெண்டர், வீட்டு வேலை செய்பவர்கள் இ-பதிவு செய்தபின் பணிக்கு செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனால், அதிகமானோர் இ – பதிவு இணையத்தில் விண்ணப்பிக்க முயன்றனர். இதனால், இ-பதிவு இணையதளம் முடங்கியது. 

இந்நிலையில், இதுகுறித்து தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், ஒரே நேரத்தில் 60 லட்சம் பேர் இ- பதிவு செய்ய இணைய தளத்திற்கு வந்த காரணத்தால் தான் இணையதளம் முடங்கியது. விரைவில் இணையதளம் மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth