தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் தொழிற்சாலைப் பணியாளர்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கு ‘இ-பதிவு’ கட்டாயம் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் கொரோனா இரண்டாம் அலை தீவிரமடைந்ததன் காரணமாக கடந்த இரண்டு வாரங்களாக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்தது.எனினும்,கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் நாளை முதல் தளர்வுகளற்ற கடுமையான முழு ஊரடங்கு அமல்படுத்தவுள்ள நிலையில் தமிழக அரசு பல்வேறு கடுமையான கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
எனினும்,அத்தியாவசிய பொருட்கள் தயாரிக்கும் ஆலைகள் செயல்பட ஏற்கெனவே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் தொழிற்சாலை பணியாளர்களை அழைத்து செல்லும் வாகனங்களுக்கு ‘இ-பதிவு’ கட்டாயம் எனவும்,அதனால்,மே 25 ஆம் தேதி முதல் தொழிற்சாலைகளின் வாகனங்கள் ‘இ-பதிவு’ செய்துகொள்ள வேண்டும் எனவும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
மேலும்,தொழிற்சாலைப் பணியாளர்கள் இருசக்கர வாகனங்களில் செல்ல அனுமதி கிடையாது என்றும்,இதன்காரணமாக,தொழிலாளர்களை அழைத்து வர 4 சக்கர வாகனங்களை,நிறுவனங்கள் ஏற்பாடு செய்துக் கொள்ள வேண்டும் என்றும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
வாடிகன் : கடந்த ஏப்ரல் 21-ல் மறைந்த போப் பிரான்சிஸின் இறுதி சடங்கு இன்று (ஏப்ரல் 26) காலை வாடிகான்…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி கருத்தரங்கம் தொடங்கி நடைபெற்று வருகிறது.…
தெஹ்ரான் : தெற்கு ஈரானின் பந்தர் அப்பாஸ் நகரில் ஷாகித் ராஜீ துறைமுகம் செயல்பட்டு வருகிறது. அங்கு இன்று திடீரென…
கோவை : இன்றும் நாளையும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கம் கோவை சரவணம்பட்டியில் உள்ள தனியார்…
கோவை : தமிழக வெற்றிக் கழகம் கட்சி சார்பில் இன்றும் நாளையும் தேர்தல் வாக்குசாவடி முகவர்களுக்கான கருத்தரங்கம் நடைபெற உள்ளது.…
சென்னை : இன்று தமிழக சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கட்டாய கடன் வசூலை தடுக்கும் பொருட்டு புதிய…