தமிழகத்தில் மீண்டும் அமலுக்கு வந்த இ-பாஸ் முறை ..!
தமிழகத்தில் மே 17 முதல் மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பதிவு சான்றிதழ் கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தடுக விதிக்கப்பட்ட ஊரடங்கு விதிகளை கடுமையாக்க வேண்டும் என நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அனைத்துக்கட்சி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், ஏற்கெனவே அமலில் உள்ள கட்டுப்பாடுகளுடன் பின்வரும் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக தமிழகத்தில் மீண்டும் இ-பாஸ் முறை அமலுக்கு வந்துள்ளது. ஏற்கனவே வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பாஸ் முறை அமலில் இருந்தது.
தற்போது தமிழகத்தில் உள்ள மாவட்டங்களுக்கு உள்ளேயும், வெளியேயும் செல்ல இ-பாஸ் முறை கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில்,
- வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகத்திற்கு வருவோருக்கு இ-பதிவு முறை கட்டாயமாக்கப்படும்.
- அத்தியாவசியப் பணிகளான திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை மற்றும் முதியோர்களுக்கான தேவை போன்றவற்றிற்கு மாவட்டங்களுக்குள்ளும் மற்றும் மாவட்டங்களுக்கிடையேயும் பயணம் மேற்கொள்ள இ-பதிவுமுறை கட்டாயமாக்கப்படும். (https://eregister. tnega. org).
- இ-பதிவு முறை 17.05.2021 காலை 6 மணி முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே தமிழகத்தில் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ-பாஸ் முறை இருந்து பின்னர் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு தளர்வில் இ-பாஸ் முறை ரத்து செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.