இனி இ-பாஸ் அவசியம் -மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு தடை
தமிழகம் முழுவதும் இன்று முதல் ஜூன் 30 வரை மாவட்டங்களுக்கிடையே போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது.குறிப்பாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகம் உள்ளதால் அங்கு முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரத்தை தொடர்ந்து மதுரையிலும் நேற்று முதல் முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு இடையில் தான் மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் பழனிசாமி நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.
இதன் பின்னர் முதலமைச்சர் பழனிசாமி பேசுகையில், இன்று முதல் வரும் 30ஆம் தேதி வரை மண்டலத்திற்குள் போக்குவரத்து ரத்து செய்யப்படுகிறது .இந்த நாட்களில் அனைத்து விதமான போக்குவரத்திற்கும் தடை செய்யப்பட்டுள்ளது .ஒரு மாவட்டத்தை விட்டு மற்றொரு மாவட்டத்திற்கு செல்ல வேண்டும் என்றாலும் இனி இ-பாஸ் அவசியம் என்று கூறினார்.