திருமணம், மருத்துவ சேவை தவிர மற்ற காரணங்களுக்காக இ-பாஸ் பெற்றிருந்தால் அதனை புதுப்பிக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் வரும் ஜூன் 19 தேதி (நாளை) முதல் 12 நாட்கள் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.
எனவே சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இன்று நள்ளிரவு முதல் முழு ஊரடங்கு அமலாகிறது. இதனால் அங்கு கண்காணிப்பை தீவிரப்படுத்த தலைமைச் செயலாளர் சண்முகம் உத்தரவு பிறப்பித்துள்ளார். இந்நிலையில் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்பொழுது அவர் கூறுகையில், சென்னை உட்பட நான்கு மாவட்டங்களில் இந்தமுறை ஊரடங்கு மிக கடுமையாக கடைபிடிக்கப்படும் என கூறிய அவர், திருமணம், அவசர மருத்துவ தேவை தவிர மற்ற காரணங்களுக்காக ஏற்கனவே பெற்ற இ-பாஸ் செல்லாது எனவும், ஏற்கனவே இ-பாஸ் வைத்திருப்பவர்கள் புதுப்பிக்க வேண்டும் என தெரிவித்த நிலையில், போலி இ-பாஸ் மூலம் பயணம் செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் தெரிவித்தார்.
சென்னை : இயக்குநர் லோகேஷ் கனகராஜின், LCU-விற்கெனவே தனியாக ஒரு ரசிகர் கூட்டம் இருந்து வருகிறது. கூலி படத்திற்கு அடுத்தபடியாக,…
மும்பை : இந்திய அணியை தற்போது கேப்டனாக ரோஹித் சர்மா தான் வழிநடத்தி வருகிறார். அவருக்குப் பிறகு, இந்திய அணியை…
நியூ யார்க் : உலகமே எதிர்நோக்கி காத்திருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்று (நவம்பர் 5) இந்திய நேரப்படி மாலை…
சென்னை : தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றத்தை கண்டு வந்த காரணத்தால் நகை வாங்கும் நகை பிரியர்கள்…
சென்னை : மக்களை எமோஷனலில் உருக வைத்துள்ள அமரன் படம் வசூல் ரீதியாகவும் கலக்கிக் கொண்டு இருக்கிறது. வசூல் ஒரு…
சென்னை : தமிழக அரசின் முறைப்படி, அரசாங்க திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா என்பதை கள ஆய்வு மேற்கொள்ள அரசாங்க நிகழ்வுகளில்…