ஏற்காடு செல்ல இ-பாஸ் கட்டாயம் – சேலம் மாவட்ட ஆட்சியர்.!

Default Image

ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்ல இ- பாஸ் பெறுவது அவசியம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், கூடுதல் தளர்வுகளுடனான ஊரடங்கை, செப். 30- ம் தேதி வரை நீடிக்கப்படுகிறது என்று நேற்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இந்த 4ம் கட்ட ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. அதில், குறிப்பாக மாவட்டங்களுக்கு இடையிலான இ-பாஸ் நடைமுறை ரத்து செய்யப்பட்டது.

ஆனால், ஊட்டி, கொடைக்கானல், ஏற்காடு போன்ற மலைவாசல் சுற்றுலா தளங்களுக்கு வெளியூர் பயணிகள், இ-பாஸ் பெற்று செல்லலாம் என தமிழக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், ஏற்காடு செல்ல இ-பாஸ் கட்டாயம் என்று சேலம் ஆட்சியர் தெரிவித்துள்ளார். அரசு வழிகாட்டுதலின்படி, ஏற்காட்டிற்கு சுற்றுலா செல்ல இ- பாஸ் பெறுவது அவசியம் என சேலம் மாவட்ட ஆட்சியர் ராமன் அறிவுறுத்தியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்