தமிழகத்தில் கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இந்த ஊரடங்கு காரணமாக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கும், பிற மாநிலங்களிலிருந்து தமிழகம் வருவதற்கும் இ பாஸ் கட்டாயம் என தமிழக அரசு முன்பு அறிவித்தது.
இ பாஸ் கட்டாயம் என்பதால் கடந்த சில மாதங்களாக மக்கள் சிரமப்பட்டதாகவும், உண்மையான காரணங்கள் கூறினால் கூட இ-பாஸ் மறுக்கப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், இ-பாஸ் முறையை ரத்து செய்ய வேண்டுமென எதிர்க்கட்சிகளும், பொதுமக்களும் வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், இ-பாஸ் அரசாணையை ரத்து செய்யக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இ-பாஸ் ரத்து வழக்கில் தமிழக தலைமைச் செயலர் பதிலளிக்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவு பிறப்பித்து , வழக்கை செப்டம்பர் 16-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
சமீபத்தில் இ பாஸ் விண்ணப்பித்த அனைவருக்கும் இ பாஸ் கிடைக்கும் முறையை முதல்வர் அறிவித்து தற்போது அமலில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…