DYFI மாநாடு நிறைவு….புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு…..!!

Published by
Dinasuvadu desk
  • இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநாடு நிறைவு
  • புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு
  • பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றம்

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 16ஆவது மாநில மாநாடு கடந்த வெள்ளிக்கிழமை லட்சம் இளைஞர்கள் பங்கேற்ற மாபெரும் பேரணியுடன் சிவகங்கை மாவட்டத்தில் தொடங்கி கடந்த 3 நாட்களாக நடைபெற்று வருகின்றது. வெள்ளிக்கிழமை தொடங்கிய பேரணி  பொது கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிருந்தா காரத் ,
தலைவர்கள் பேச்சு :
மாநிலங்கவை உறுப்பினர் டி.கே ரங்கராஜன் ,  DYFI-யின் அகில இந்திய தலைவர் முகம்மது ரியாஸ் , அகில இந்திய பொது செயலாளர் அவாய் முகர்ஜி  , த.மு.எ.க.ச மாநில தலைவர் சு.வெங்கடேசன் ,  DYFI-யின் மாநில தலைவர் எம்.செந்தில் , மாநில செயலாளர் எஸ்.பாலா , மாநில பொருளாளர் தீபா மற்றும் மத்தியக்குழு உறுப்பினர்  ரெஜிஸ்குமார் உள்ளிட்ட ஏராளமான தலைவர்கள் பங்கேற்று பேசினர்.

வேலைவாய்ப்பு :
அதை தொடர்ந்து நேற்றும் , இன்றும் நடைபெற்ற பிரதிநிதிகள் மாநாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருந்து வந்திருந்த வாலிபர் சங்க தலைவர்கள் பங்கேற்ற பிரதிநிதிகள் விவாதம் நடைபெற்றது.இதில் தமிழகத்தின் தற்போதைய அரசியல் சூழல் மற்றும் மத்தியில் ஆட்சி செய்யும் ஆட்சியாளர்களின்  மக்கள் விரோத தவறான கொள்கைகளால் வேலைவாய்ப்பை இழந்து நிற்கும்  இளைஞர்களின் வாழ்கை சூழல் குறித்து விவாதிக்கப்பட்டது.

சிறப்பு தீர்மானங்கள் : 
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள பல்வேறு பிரச்சனைகளுக்கு  தீர்வு காணும் வகையில் பல்வேறு பிரச்சனைகள் குறித்து , குறிப்பாக ஸ்டெர்லைட் , ஜாதி ஆணவ படுகொலை , நீட் தேர்வு உள்ளிட்ட மக்கள் சந்திக்கும் பிரச்சனைகளில் இருந்து மக்கள் நலன் காக்க வழிவகை செய்யும் வகையில் , ஏராளமான சிறப்பு  தீர்மானங்கள் நிறைவேற்றபட்டு , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய மாநில நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டது.
நிர்வாகிகள் தேர்வு : 
அதில் , இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் புதிய  மாநில தலைவராக  ரெஜிஸ்குமாரும் , புதிய மாநில செயலாளராக பாலாவும் , புதிய மாநில பொருளாளராக  தீபா_வும் தேர்வு செய்யப்பட்டனர்.இதே போல 12 பேர் கொண்ட   புதிய மாநில செயற்குழுவும் , 81 பேர் கொண்ட மாநிலக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது.

மக்களை கவர்ந்த மாநாடு :
இன்றய காலகட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் , மதவாத சக்திகள் , இனவாத குழுக்கள் மற்றும் ஜாதிய வெறியர்கள் என தமிழகம் படும் சீரழிவை சுட்டிக்காட்டும் வகையில், அரசியல் திருப்புமுனை மாநாடாக  குறிப்பாக இளைஞர்கள் மீது ஒரு நம்பிக்கையை ஏற்படுத்தும் மாநாடாக பார்க்கப்பட்டு சிவகங்கையில் உள்ள அனைத்து தரப்பு மக்களால் வெகுவாக பாராட்டப்பட்டது.
 
மேலும் செய்திகளுக்கு  dinasuvadu.com 

Recent Posts

ஜம்மு காஷ்மீர் சட்டமன்றத்தில் மீண்டும் கை கலப்பு! எம்.எல்.ஏ.க்கள் குண்டுகட்டாக வெளியேற்றம்!

டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…

33 mins ago

“சகோதரர் சீமானுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்” விஜய் டிவீட்.!

சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…

43 mins ago

அமரன் முடிஞ்சது..”கூலி ஷூட்டிங் போறேன்”!உண்மையை உடைத்த சிவகார்த்திகேயன்!

சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…

1 hour ago

“விஜய் பேச்சை கண்டும் காணாமல் போயிருக்கலாம், ஆனால்.?” திருமாவளவன் விளக்கம்.!

சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…

1 hour ago

கிடுகிடுவென மீண்டும் உயர்ந்த தங்கம் விலை…இன்றைய நிலவரம் இதோ!!

சென்னை :  தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…

2 hours ago

சென்னை மெரினாவில் குவிந்த வடமாநிலத்தவர்கள் : இது அவுங்க ஊர் ‘பொங்கல்’ திருவிழா!

சென்னை : தமிழ்நாட்டில் விவசாயம் செழிக்க பேருதவி புரியும் சூரியனை வணங்கும் விதமாக பொங்கல் தினம் ஆண்டுதோறும் ஜனவரி 14இல்…

2 hours ago