விஸ்வரூபம் பட ரிலீஸ் சமயத்தில் என்னை தடுமாற வைத்து சிரித்தார் ஓர் அம்மையார். என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பற்றி இடைத்தேர்தல் பரப்புரையில் கமல்ஹாசன் பேசினார்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் அடுத்த திங்கள் (பிப்ரவரி 27) இல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சியில் இருந்து இவிகேஎஸ்.இளங்கோவன் வேட்பாளராக களமிறங்கி உள்ளார். இவருக்கு ஆதரவாக திமுக அமைச்சர்கள், கூட்டணி கட்சியினர் தொடர் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
கமல் ஆதரவு : இவிகேஎஸ்.இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதுடன் கூட்டணி கட்சியினரிடம் நேரடியாக சென்று ஆதரவு கேட்டதுடன், மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசனை சந்தித்தும் ஆதரவு அளிக்க கேட்டுக்கொண்டார். கமல்ஹாசனும் ஆதரவு அளிப்பதாகவும் பிரச்சாரம் மேற்கொள்வதாகவும் அறிவித்தார்.
பெரியாரின் பேரன் : நேற்று இ.வி.கே.எஸ்.இளங்கோவனுக்கு ஆதரவாக ஈரோடு கிழக்கு தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் அப்போது அவர் பல்வேறு சம்பவங்களை நினைவு கூர்ந்தார். அவர் கூறுகையில், நானும் பெரியாரின் பேரன் தான். இளங்கோவனும் பெரியாரின் பேரன் தான் என குறிப்பிட்டார். நான் காந்தியின் பேரன் என எல்லா இடத்திலும் சொல்லி இருக்கிறேன். கொள்கைகளால் வேறுபட்டு இருந்தாலும் பெரியார் காந்தியின் தம்பி எனவே இப்படி கூறுகிறேன் என பிரச்சாரத்தில் குறிப்பிட்டார்.
மதசார்பற்ற நாடு : நான் ஆதாயத்திற்காக அரசியலுக்குள் வரவில்லை. இப்போது இங்கே வந்ததும் ஆதாயத்திற்காக இல்லை. நான் விஸ்வரூபம் எனும் ஓர் படம் எடுதேன். அப்போது என்னை தடுமாற வைத்து சிரிக்க வைத்தார் ஓர் அம்மையார் (அப்போது ஆட்சியில் இருந்தவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா). கலைஞர் எனக்கு போன் செய்து பயப்படாதே உனக்கு ஏதாவது உதவி வேண்டுமா.? என கேட்டார் அப்போது நான் பார்த்து கொள்கிறேன் என கூறினேன். அதே போல் தான் தற்போதைய முதல்வர் ஸ்டாலினும், நாங்கள் இருக்கிறோம் என கூறினார். நான் இங்கு வந்ததற்கு ஒரே காரணம் நம் நாடு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும். என்பதற்காக மட்டுமே என மக்கள் நீதி மய்ய கட்சி தலைவர் கமல்ஹாசன் குறிப்பிட்டார்.
சென்னை : 2019ஆம் ஆண்டு நாடாளுமன்ற முதல் திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் தொடர் வெற்றிகளை பெற்று வருகின்றன. …
ஜெட்டா : 2025 ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலத்தில் முதல் நாள் நேற்று விறுவிறுப்பாக நடைபெற்றது. அதில், சென்னை முதல்…
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் நேற்றைய தினம் நிறைவடைந்தது. இன்றைய தினம் இரண்டாம்…
சிங்கப்பூர் :உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் இன்று முதல் தொடங்குகிறது. சிங்கப்பூரின் ரிசார்ட்ஸ் வேர்ல்ட் சென்டோசாவில்…
மகாராஷ்டிரா : நடந்து முடிந்த மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான மகாயுதி கூட்டணி மிகப் பெரிய வெற்றி பெற்று…
டெல்லி : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. இன்று தொடங்கி டிசம்பர் 20ம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறவுள்ளது.…