துரைமுருகனுக்கு சொந்தமான இடங்களில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை
துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18 ஆம் தேதி மக்களவை தேர்தல் மற்றும் 18 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்று வருகிறது.
திமுக பொருளாளர் துரைமுருகன் வீடு மற்றும் அவரது மகன் கதிர் ஆனந்துக்கு சொந்தமான கல்லூரி, மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் சோதனை நடத்தினார்கள். பின்னர் பலமணி நேரத்திற்கு பின் சோதனை நிறைவு பெற்றதாக வருமான வரித்துறை தெரிவித்தது.
இதன் பின்னர் வருமானவரித்துறை விளக்கம் அளித்தது.அதில், துரைமுருகன் வீட்டில் இருந்து கணக்கில் வராத ரூ.10.50 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது என்றும் வேலூர் மாவட்ட தேர்தல் அதிகாரி அளித்த தகவலின் பேரில் சோதனை நடத்தப்பட்டது என்று என்று தெரிவித்தது.அதேபோல் துரைமுருகன் வீடு, அவரது மகனின் பள்ளி, கல்லூரியில் நடந்த சோதனை நிறைவுபெற்றது என்று வருமானவரித்துறை தெரிவித்தது.ஆனால் இந்த சோதனைக்கு எதிர்க்கட்சிகள் அனைத்தும் தங்களது கண்டனத்தை பதிவு செய்திருந்தது.
இந்நிலையில் இன்று வேலூர் கல்புதூரில் உள்ள துரைமுருகனுக்கு சொந்தமான கல்லூரியில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அதுபோல் காட்பாடி அருகே பள்ளிக்குப்பத்தில் திமுக பிரமுகர் பூஞ்சோலை சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.