“எங்களை வளர்த்தவர் கருணாநிதி” மதிமுக மாநாட்டில் துரைமுருகன் பேச்சு..!!

Published by
Dinasuvadu desk

தானும் வைகோவும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள் என, திமுக பொருளாளர் துரைமுருகன் பேசியுள்ளார்.

பெரியார் பிறந்த நாள் விழா, அண்ணா பிறந்த நாள் விழா, மதிமுக வெள்ளி விழா – வைகோவின் பொது வாழ்வு பொன் விழா என, மதிமுக சார்பாக இன்று (சனிக்கிழமை) முப்பெரும் விழா மாநில மாநாடு ஈரோட்டில் நடைபெற்றது.

இதில், மத்திய பாஜக அரசு மற்றும் அதன் கைப்பாவையாக இயங்கி வருகின்ற அதிமுக அரசு இரண்டையும் வீழ்த்துவதற்கு திமுகவின் தலைமையில், தோழமைக் கட்சிகளுடன் அணி சேர்ந்து, மதிமுக தனது அரசியல் கடமைகளை மேற்கொள்ளும் என தீர்மானம் இயற்றப்பட்டுள்ளது. மேலும், பொதுவாழ்வில் பொன்விழா கண்ட வைகோவுக்கு பாராட்டு தீர்மானம் உட்பட 35 தீர்மானங்கள் இயற்றப்பட்டன. இதுதவிர, மறைந்த திமுக தலைவர் கருணாநிதி, முன்னாள் பிரதமர் வாஜ்பாய் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டன.

இந்த மாநாட்டில் திமுக பொருளாளர் துரைமுருகன், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, நடிகர் சத்யராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, துரைமுருகன், கருணாநிதியின் உருவப்படத்தை திறந்து வைத்தார்.

Image result for துரைமுருகன்

மாநாட்டில் பேசிய துரைமுருகன், “நானும் வைகோவும் கருணாநிதியால் வளர்க்கப்பட்டவர்கள். அவரால் விலாசம் பெற்றவர்கள் நாங்கள். எந்த உயரத்தில் பறந்தாலும் கருணாநிதி என்ற சக்தி எங்கள் இதயத்தில் இருப்பதால் தான் எங்களால் அரசியலில் இருக்க முடிகிறது. நண்பனே இனி இனம் பார்த்து பழகு, களம் பார்த்து கால் வை” என பேசினார்.மேலும், அரசியலுக்கு அப்பாற்பட்டு தானும் வைகோவும் நட்பு பாராட்டுவதாக துரைமுருகன் தெரிவித்தார்.

DINASUVADU

Recent Posts

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…

19 minutes ago

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?.

சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி  குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…

23 minutes ago

தொடர்ந்த சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…

55 minutes ago

சென்னை: பாதியில் நிறுத்தப்பட்ட ரயில்கள் – பயணிகள் தவிப்பு.!

சென்னை: சென்னையில் இருந்து கும்மிடிப்பூண்டி செல்லும் ரயில்கள் திடீரென எண்ணூரில் நிறுத்தப்பட்டது. இதனால், சென்னை - கும்மிடிப்பூண்டி மார்க்கத்தின் ரயில்…

1 hour ago

தமிழகத்தில் சனிக்கிழமை (21/12/2024) இங்கெல்லாம் மின்தடை!

கோவை : காந்திபுரம், சித்தாபுதூர், டாடாபாத், ஆவாரம்பாளையம் பகுதி, மேட்டுப்பாளையம் சாலை, சர்க்யூட் ஹவுஸ், விமானப்படை, சுக்ரவார்பேட்டை, மரக்கடை, ராம்நகர்,…

1 hour ago

மேற்கிந்திய தீவுகளை வீழ்த்திய இந்திய மகளிர் அணி! 5 ஆண்டுகளுக்குப் பிறகு சொந்த மண்ணில் அசத்தல்!

நவி மும்பை : மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி  3 டி0 போட்டிகள், 3…

2 hours ago