தீ எல்லாம் குளிக்காத.. டீ குடிச்சுட்டு வேலைய பாரு: கேசுவலாக தொண்டரை சமாதானப்படுத்திய துரைமுருகன்
- அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர் தலைவா நான் தீக்குளிக்க எட்டுமா சொல்லுங்க இப்பவே நான் தீ குளிக்க தயார் என்று கத்தினார்
வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள திமு கழகத்தின் பொருளாளர் துரைமுருகன் வீட்டில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் வருமானவரித்துறை சோதனை நடைபெற்றது. மேலும், வேலூர் மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் மற்றும் துரைமுருகன் அவர்களின் மகன் கதிர் ஆனந்த் அவருக்கு சொந்தமான கல்லூரிகள் மற்றும் பல இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடந்தது. சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த வருமானவரித்துறை சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் இது குறித்து விளக்கமளிக்க செய்தியாளர்களை சந்தித்தார் துரைமுருகன்…
அப்போது அதிமுக மற்றும் பாஜக கூட்டணிக்கு தோல்வி பயம் வந்து விட்டது இதனால் பொதுத்துறை நிறுவனங்களை பயன்படுத்தி நம்மை மிரட்டுகிறார்கள் அரசியல் அரிச்சுவடி கூட தெரியாதவர்களாக இருக்கிறார்கள் என்று விமர்சித்தார்
அப்போது கூட்டத்தில் இருந்த தொண்டர் ஒருவர், .தலைவா நான் தீக்குளிக்கட்டுமா?’ சொல்லுங்க… ‘இப்பவே நான் தீ குளிக்க தயார்’ என்று கத்தினார் இதற்கு பெரிதாக அலட்டிக் கொள்ளாத துரைமுருகன் ‘தீ எல்லாம் குளிக்காத செத்து போயிடுவ…’ போய் ‘டீ குடிச்சிட்டு பொறுமையா வேலைய பாரு’ என்று கிண்டலாக பதில் அளித்தார்