விலகல் முடிவில் உறுதியாக இருக்கும் துரை வைகோ…ஏற்க மறுக்கும் மதிமுக தலைமை!
துரை வைகோவின் விலகல் கடிதத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது என நிர்வாகக் குழுக் கூட்டத்தில் நிர்வாகிகள் வலியுறுத்தியுள்ளனர்.

சென்னை : (மதிமுக) முதன்மைச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகுவதாக துரை வைகோ விலகுவதாக நேற்று அறிக்கை ஒன்றை வெளியீட்டு அறிவித்திருந்தார். அவர் வெளியீட்டு இருந்த அறிக்கையில் ” மதிமுக தலைவருக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் ஒருவர் செயல்படுகிறார். கட்சிக்கு பழியை சுமத்தி அதில் சுகம் காணும் நபர் மத்தியில் என்னால் கட்சிப் பணி செய்ய முடியாது என்னால் இயக்கத்திற்கோ, தலைவருக்கோ எந்த சேதமும் வந்துவிடக்கூடாது .
கடந்த 7 ஆண்டுகளாக நான் மேற்கொண்டு வந்த முயற்சிகளை கட்சியினர் தொடர வேண்டும். ஏப்ரல் 20-ல் சென்னையில் நடைபெறும் கட்சி நிர்வாக குழு கூட்டத்தில் நான் பங்கேற்ப்பேன். திருச்சி எம்பியாக நான் தொடர்ந்து செயல்படுவேன்” என கட்சியில் இருந்து வெளியேறுவதற்கான காரணத்தையும் அவர் கூறியிருந்தார்.
ஏற்கனவே, அவரை சமாதானம் செய்யும் முடிவில் வைகோ இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்த சூழலில், சென்னை எழும்பூரில் உள்ள மதிமுகவின் தலைமை அலுவலகத்தில், அவைத்தலைவர் அர்ஜுன் ராஜ் தலைமையில் அக்கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. துரை வைகோ பதவி விலகலை கட்சித் தலைமை அதிகாரப்பூர்வமாக இன்னும் ஏற்காத நிலையில், இன்றைய கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்பு எனத் தகவல்கள் வெளியாகி இருந்தது.
அதைப்போலவே, ம.தி.மு.க முதன்மை செயலாளர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்த துரை வைகோவின் ராஜினாமாவை மதிமுக ஏற்கவில்லை. கட்சி நிர்வாகிகள் பலரும் நிர்வாகக் குழு கூட்டத்தில் வைத்தே அவர் விலக கூடாது என பேசியுள்ளார்கள். ஆனால், துரை வைகோ தான் விலகுவது விலகுவது தான் என்பது போல தன்னுடைய முடிவில் உறுதியாக இருப்பதாக பேசியுள்ளார்.
நிர்வாகக் குழு கூட்டம் நடைபெறுவதற்கு முன்பு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது ” நான் என்னுடைய விலகல் கடிதத்தை கொடுத்துவிட்டேன். மூத்த நிர்வாகிகள் ஒன்றாக இணைந்து நிர்வாகக் குழு கூட்டத்தில் முடிவு செய்வார்கள் என்று நினைக்கிறேன். என்ன காரணத்துக்காக நான் கட்சியில் இருந்து விலகுகிறேன் என்பதை சொல்லிவிட்டேன். எனவே, என்னுடைய அறிக்கையில் மாற்றம் இல்லை.
நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை.. நான் விரும்பி அரசியலுக்கு வரவில்லை. மதிமுகவினர் நிர்பந்தம் செய்ததாலேயே வந்தேன். இந்தப் பிரச்சனை எதனால் உருவானது என்று நிர்வாகக் குழு கூட்டத்திற்கு பின்னர், கட்சி நிர்வாகிகள் கூறுவார்கள். இந்த இயக்கத்தை உருவாக்கியவர் வைகோ என்பதில் மாற்றுக் கருத்து இல்லை” எனவும் துரை வைகோ பேசினார். எனவே, அடுத்து என்ன நடக்கப்போகிறது என்கிற கேள்விகளும் அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK குடும்பத்தில் சோகம்! கான்வே தந்தை உயிரிழப்பு!
April 21, 2025