எம்.ஜி.ஆர், வைகோ கட்சியை விட்டு பிரிந்து சென்றபோதே திமுக சிறிய இடர்பாடுகளை தான் சந்தித்தது.! – துரைமுருகன் கருத்து.!
திமுக எம்.எல்.ஏ கு.க.செல்வம் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி.நட்டாவை சந்தித்தது குறித்து திமுக பொருளாளர் துரைமுருகன் கருத்துக்கூறியுள்ளார்.
திமுக கட்சியை சேர்ந்த வி.பி.துரைசாமி பாஜகவில் இணைந்துவிட்டார். மேலும், ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் கு.க.செல்வம் பாரதிய ஜனதா கட்சியில் இணைய உள்ளதாக தகவல் வெளி வந்த வண்ணம் இருக்கிறது. மேலும், அவர் டெல்லி சென்று பாஜக தேசிய தலைவரான ஜே.பி.நட்ட அவை சந்தித்து உள்ளார்
மேலும் செல்வம் என்று தமிழக பாரதிய ஜனதா அலுவலகத்திற்குச் சென்றுள்ளார் இதனால் திமுக செல்வத்தை சஸ்பெண்ட் செய்துள்ளது
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த திமுக பொருளாளர் துரைமுருகன் எம்ஜிஆர் சம்பத் வைகோ போன்றோர் திமுகவிலிருந்து பிரிந்து சென்ற போது திமுக எந்தவித சிறிய இடர்பாடுகளை சந்தித்து பிபி துரைசாமி செல்வம் போன்றவர்களால் திமுகவுக்கு எந்த ஒரு சிறிய இடர்பாடும் ஏற்படப் போவதில்லை என அவர் தனது கருத்தை தெரிவித்துள்ளார்