மீண்டும் முகக்கவசம்… கோவையில் அதிகம் பரவும் ஃபுளு காய்ச்சல்.!
தற்போது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை பெய்து வருவதால் , பருவநிலை மாற்றம் காரணம் காரணமாக சளி, இருமல், காய்ச்சல் என எளிதில் பரவக்கூடிய நோய்கள் அதிகமாகியுள்ளன. இதனை தடுக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கைக்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கோவையில், தற்போது ஃபுளு காய்ச்சல் பரவல் என்பது சற்று அதிகரித்து உள்ளது என்றும், தினசரி தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 100ஐ தாண்டி வருவதாக கூறப்பட்டுள்ளது.
இரவு முழுவதும் கொட்டி தீர்த்த கனமழை… தமிழகத்திற்கு ‘ஆரஞ்சு அலர்ட்’.!
இந்த புளு காய்ச்சலானது சுவாசகுழாய் வழியாக, அதாவது ஒருவர் தும்மும் போதோ அல்லது இருமும் போதோ எளிதில் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் என கூறப்பட்டுள்ளது.
இதன் காரணமாக கோவையில் பொதுவெளியில் செல்லும் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என கோவை மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுமாரும், கடைகளில் தாமாக மருந்து வாங்கி சாப்பிட வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.