Michaung Cyclone - Chennai Flood [File Image ]
சென்னை மற்றும் அதனை சுற்றுவட்டார மாவட்டங்களான செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களையும் மிக்ஜாம் புயல் (Michaung Cyclone) கடுமையாக தாக்கி வருகிறது. சென்னையில் இருந்து 90கிமீ தொலைவில் வங்கக்கடலில் மிக்ஜாம் புயலானது நிலைகொண்டுள்ளது. மணிக்கு 10கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.
இதன் காரணமாக அதி கனமழை அளவு கொட்டி தீர்த்து வருகிறது. இன்று இரவு வரை சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . கனமழை காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகள் நிரம்பிவிட்டன.
Michuang Cylone Live : வெளுக்கும் கனமழை..! முக்கிய ஏரிகளின் நீர்வரத்து அதிகரிப்பு.!
இதனால் மீட்புப்பணிகளில் ஈடுபட தேசிய மீட்பு படையினர் தமிழகத்திற்கு விரைந்துள்ளனர். 250 வீரர்கள் கொண்ட 10 தேசிய மீட்புப்படை குழுக்களாக பிரிந்து சென்னை, செங்கல்ப்ட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர் . பெங்களூருவில் இருந்தும் 3 மீட்பு குழுக்கள் சென்னை வந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில்…
சென்னை : தேமுதிகவுக்கு ராஜ்யசபா சீட்டு கொடுப்பதாக ஒப்பந்தம் செய்யவில்லை என இபிஎஸ் பேசியுள்ளது தேமுதிகவை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கடந்த…
பெங்களூரு : துபாயிலிருந்து தங்கம் கடத்தியதாக நடிகை ரான்யா ராவ் கைது செய்யபட்டார். கர்நாடகாவில் ஐபிஎஸ் அதிகாரியொருவரின் நெருங்கிய உறவினரான…
துபாய் : 2025 -ஆம் ஆண்டுக்கான சாம்பியன்ஸ் டிராபி தொடரின் அரையிறுதி போட்டி இன்று துபாய் சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்று…
துபாய் : இந்தியா என்றாலே எனக்கு பிடிக்கும் என்பது போல ஐசிசி போட்டிகளில் ஆஸ்ரேலியா அணியின் தொடக்க ஆட்டக்காரர் டிராவிஸ்…
சென்னை : வரும் ஏப்ரல் 10-ஆம் தேதி அஜித்தின் குட் பேட் அக்லி, மற்றும் தனுஷின் இட்லி கடை ஆகிய படங்கள்…