கஜா புயல் காரணமாக, ஐம்பதாண்டு கால வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர்…!தேமுதிக தலைவர் விஜயகாந்த்
கஜா புயல் காரணமாக, ஐம்பதாண்டு கால வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
இது குறித்து தேமுதிக தலைவர் விஜயகாந்த் வெளியிட்டுள்ள அறிக்கையில், கஜா புயல் பாதிப்புக்குள்ளான தஞ்சை, திருவாரூர், நாகை ஆகிய மாவட்டங்களுக்கு பிரேமலதா விஜயகாந்த் உள்ளிட்ட தேமுதிகவினர் நேரில் சென்று குறைகளை கேட்க உள்ளோம்.புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உடனடியாக உதவிட வேண்டும் என்றும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.