தமிழகத்தில் மிக்ஜாம் புயல் எச்சரிக்கை.! 13 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை.!

Mikjam storm - Heavy Rain in Tamilnadu

தென்மேற்கு வங்க கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது வலுவடைந்தது புயலாக மாறியுள்ளது.`மிக்ஜாம்’  என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது இன்று உருவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்த புயல் மேற்கு- வட மேற்கு திசையில் நகர்ந்து தென்மேற்கு வங்க கடலில் கரையை கடக்கும் என கூறப்பட்டுள்ளது.

புயல் கரையை கடக்கும் போது 80 கிலோ மீட்டர் முதல் 90 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசு கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னைக்கு 310 கிலோமீட்டர் தொலைவில் கிழக்கு -தென்கிழக்கில் புயல் மையம் கொண்டுள்ளது.  தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து புயல் நகர்ந்து 4-ம் தேதி வட தமிழ்நாடு, ஆந்திரா கடற்கரையை நெருங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் 5-ம் தேதி முற்பகலில் நெல்லூர் – மசூலிப்பட்டினம் இடையே புயலாக கரையை கடக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் `மிக்ஜாம்’ புயல் உருவானது..!

இந்த புயல் காரணமாக தமிழகத்தில் 13 மாவட்டங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. சென்னை , செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் இன்று இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில் திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் அதிகபட்சமாக 15 செமீ மழை பெய்துள்ளது. அடுத்து ஊத்துக்கோட்டை 13 செமீ மழை, சென்னை 11 செமீ மலை, ஆலந்தூர்,  பொன்னேரியில் தலா 10செமீ மழை, திருவண்ணமலை, ஆவடி பகுதியில் 9 செமீ மழை அளவு பதிவாகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்