கனமழை… விடுமுறை இல்லை.. மாணவர்கள் ஏமாற்றம்.!
வங்கக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி, குமரிக்கடலில் நிலவும் கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. நேற்று இரவு பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்தது.
இன்றும் நாளையும் தமிழகத்தில் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் இன்று தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
மீண்டும் முகக்கவசம்… கோவையில் அதிகம் பரவும் ஃபுளு காய்ச்சல்.!
ஆனால் நேற்று இரவு மழை கொட்டி தீர்த்தத்தால், இன்று காலை கனமழை எச்சரிக்கை விடுக்கப்படாததால் சென்னை மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகள் வழக்கம்போல இயங்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதே போல, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கோவை ஆகிய மாவட்டங்களிலும் பள்ளிகல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை வழக்கம்போல இயங்கும் எனவும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
நாகை மாவட்டத்தில் மழைக்காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு முக்கியம் என்பதால், அந்தந்த பள்ளிகளின் தலைமையாசிரியர்களே விடுமுறை அறிவிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் அறிவித்துள்ளார்.
காரைக்கால், புதுச்சேரியில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால், அங்கு பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.