கனமழை எதிரொலி.! தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை.!
தென்கிழக்கு அரபிக்கடல், அதனை ஒட்டிய மாலத்தீவு கடற்பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கேரளா மற்றும் தமிழகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை பகுதி மாவட்டங்கள் மற்றும் உள் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் முன்னதாக எச்சரிக்கை விடுத்தது.
விடாது பெய்த கனமழை..! நெல்லை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.!
அதே போல இன்று அதிகாலையிலேயே நெல்லை, தூத்துக்குடி , தென்காசி மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. கனமழையை தொடர்ந்து முன்னதாக திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவித்து இருந்தார்.
இதனை தொடர்ந்து கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டதத்தில் தூத்துக்குடி (டவுண்) மற்றும் திருச்செந்த்தூர் என் 2 வட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும்,தென்காசி மாவட்டத்திலும் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை என்றும் அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இன்றைய நாளில் சிறப்பு வகுப்புகளும் நடத்த அனுமதி இல்லை என கூறப்பட்டள்ளது.
இன்று நீலகிரி , கோவை , திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம் , சிவகங்கை, மதுரை, திருவாரூர் , மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.