இரட்டை தலைமை விவகாரம்.. தேர்தல் ஆணையம் சொல்வதை செய்கிறோம் – சாகு
தேர்தல் ஆணையம் கூறுவதை தான் நாங்கள் செய்கிறோம் என அதிமுகவில் இரட்டை தலைமை குறித்து தலைமை தேர்தல் அதிகாரி பதில்.
சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு, தமிழகத்தில் இறுதி வாக்காளரை பட்டியலை வெளியிட்டார். அதன்படி, தமிழகத்தில் இறுதி வாக்காளர் பட்டியலின்படி, 6.20 கோடி வாக்காளர்கள் உள்ளனர். தமிழகத்தில் 3.04 கோடி ஆண், 3.15 கோடி பெண் மற்றும் 8,027 மூன்றாம் பாலின வாக்காளர்கள் உள்ளனர் எனவும் தெரிவித்தார்.
இதனைத்தொடர்ந்து பேசிய தலைமை தேர்தல் அதிகாரி, தேர்தல் ஆணையம் கூறுவதை தான் நாங்கள் நடைமுறைப்படுத்துகிறோம் என்று எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்துக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான கேள்விக்கு தலைமை தேர்தல் அதிகாரி பதிலளித்தார்.
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என குறிப்பிட்டு அதிமுக அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பப்பட்டது. தேர்தல் ஆணையம் குறிப்பிடும் பதவியில் யாரும் இல்லை என அந்த கடிதத்தை திருப்பி அனுப்பியிருந்தது அதிமுக அலுவலகம். மீண்டும் அதுபோன்று குறிப்பிட்டு தேர்தல் ஆணையம் அதிமுக தலைமை அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பியிருந்தது.