இரட்டை குடியுரிமை விவகாரம் : சட்டப்பேரவையில் இருந்து திமுக வெளிநடப்பு
தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.
இன்று தமிழக சட்டப்பேரவை கூட்டம் நடைபெற்று வருகிறது. 2-வது நாளாக நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில், அமைச்சர் பாண்டியராஜன் பேசுகையில், இலங்கை தமிழர்களுக்கான இரட்டை குடியுரிமை வழங்குவதில் எந்த தவறும் இல்லை என்றும் தெரிவித்தார். அதிமுகவின் நிலைப்பாடு சரிதான் என்று தெரிவித்தார்.ஜெயலலிதா பல ஆண்டுகால இந்த கோரிக்கையை வலியுறுத்தி வருவதாக தெரிவித்தார்.
இதன் பின் பாண்டியராஜன் பேச்சில் எந்த மீறலும் என்று சபாநாயகர் தனபால் தெரிவித்தார். ஆனால் சபாநாயகரின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து , தமிழக சட்டப்பேரவையில் இருந்து திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.