ஈழத்தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை ரத்து.! மத்திய அரசு அறிவிப்பு.!
- தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
- இந்நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அதிமுக, திமுக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். மேலும் இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று தமிழக முதலவர் பழனிச்சாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் கடந்த ஆண்டு கோரிக்கை வைத்தார். பின்னர் இதுகுறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாகவும், சரியான நேரத்தில் சட்டத்திருத்தம் கொண்டு வரப்படும் என்றும் அமித் ஷா உறுதியளித்ததாக கூறப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது சாத்தியமில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவது குறித்து புதுச்சேரி அதிமுக எம்.பி கோகுலகிருஷ்ணன் மாநிலங்களவையில் கேள்வி எழுப்பினார். இதற்கு பதிலளித்த உள்துறை இணை மந்திரி நித்யானந்த ராய் அரசியலமைப்பு 9ன் கீழ் இரட்டை குடியுரிமை வழங்க முடியாது எனவும், இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்குவதற்காக ஒப்பந்தம் செய்யும் திட்டம் ஏதுமில்லை எனவும் தெரிவித்தார்.