டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட விலகி விடுவார் – அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பேச்சு!
டிடிவி தினகரனின் கார் டிரைவர் கூட இன்னும் ஒரு வாரத்தில் அவரை விட்டு விலகி விடுவார் என்று தமிழக பால் வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அவர்கள் தெரிவித்துள்ளார். அவர் பின்னல் சிங்கம்,புலி ஆகியவை துரத்தும் நிலையில் அதை உணராமல் பேசி வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் பள்ளி மடிக்கணினி வழங்கும் நிகழ்வில் இதனை தெரிவித்துள்ளார். மேலும் டிடிவி தினகரன் தற்போது தனிமையில் இருப்பதால் பயந்து போய் உள்ளார். அதிமுக என்ற பெரிய கட்சியை அவர் குடும்ப கட்டபாட்டில் கொண்டு வர முயற்சி செய்தார் ஆனால் அது நடக்கவில்லை அந்த விரக்தியில் மத்திய, மாநில அரசுகளை விமர்ச்சித்து வருகிறார் என்றும் தெரிவித்துள்ளார்.
அமமுகவில் இருந்து தற்போது ஒவ்வொருவராக விலகி அவரும் நிலையில், இன்னும் ஒரு வாரத்தில் டிடிவி தினகரனின் கார் டிரைவரும் அவரை விட்டு விலகி விடுவார் என்று தெரிவித்துள்ளார்.