டிடிவி தினகரன் தற்போது நலம்பெற்று வருகிறார் – மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை

Default Image

டிடிவி தினகரன் நலம் பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை. 

அமமுக பொது செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள், உடல்நலக்குறைவு காரணமாக தஞ்சையில் உள்ள அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதுகுறித்து  ட்விட்டர் பக்கத்தில், ‘சிறிய உடல்நலக் குறைவு (உணவு ஒவ்வாமை) காரணமாக தஞ்சையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளேன். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு ஓரிரு நாட்களில் வீடு திரும்பலாம் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.

எனவே, கழக உடன்பிறப்புகள் யாரும் கவலைப்பட வேண்டாம். நேரில் பார்க்க வருவதையும் தவிர்க்க வேண்டுமென அன்போடு கேட்டுக்கொள்கிறேன் என பதிவிட்டு இருந்தார்.

இந்த நிலையில், டிடிவி தற்போது நலம் பெற்று வருவதாக தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனை நிர்வாகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ttv

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்