அடுத்த 5 நாட்களுக்கு வறண்ட வானிலை, பனிமூட்டம்;60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று – வானிலை ஆய்வு மையம்!

சென்னை:இன்று முதல் டிச.23 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள நிலநடுக்கொட்டு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி உருவாகும் என கணிக்கப்பட்டிருந்த நிலையில்,காலதாமதமாக நேற்று உருவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
மேலும்,இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கிழக்கு-வடகிழக்கு திசையில் நகர்ந்து அடுத்த 48 மணி நேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெறக் கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்திருந்தது.
இந்நிலையில்,இன்று முதல் டிச.23 ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுவை, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும்,இன்றும் நாளையும் தமிழகத்தின் உள் மாவட்டங்கள் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை இயல்பை விட 1 முதல் 2 டிகிரி செல்சியஸ் குறைவாகக் காணப்படும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு. வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 29 மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21 டிகிரி செல்சியஸை ஒட்டி இருக்கும்.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
இன்றும்,நாளையும் குமரிக்கடல் பகுதிகளில் பலத்த காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.இப்பகுதிகளுக்கு செல்லும் மீனவர்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.
குறிப்பு: அந்தமானுக்கு தெற்கே பூமத்திய ரேகை ஒட்டிய பகுதியில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும்,நாளையும் தென் கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே மணிக்கு 60 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்லவேண்டாமென அறிவுறுத்தப்படுகிறார்கள்.
லேட்டஸ்ட் செய்திகள்
“2026-ல் தவெக வெற்றி பெரும்., M.S.தோனியை விட நான் பிரபலமாவேன்” பிரசாந்த் கிஷோர் பேச்சு!
February 26, 2025
GetOut கையெழுத்திட அழைத்த ஆதவ்., மறுத்த பிரசாந்த் கிஷோர்!
February 26, 2025