மது அருந்திய கல்லூரி மாணவர்களுக்கு நூதன தண்டனை அளித்த உயர்நீதிமன்றம்!
விருதுநகரில் உள்ள தனியார் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயின்று வரும் மாணவர்கள் 8 பேர் மது அருந்திவிட்டு, வகுப்பறைக்குள் சென்றதாகவும், அப்படியே கம்ப்யூட்டர் லேப் வகுப்புக்கும் சென்றதாக குற்றம் சாட்டி கல்லூரி நிர்வாகம் இவர்களை மூன்றாம் ஆண்டு படிக்க அனுமதிக்க மறுத்தது.
இதனால், அந்த 8 மாணவர்களும், உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதில், ‘ கல்லூரி நிர்வாகமானது, எங்களிடம் மூன்றாம் ஆண்டுக்கான கட்டணத்தை வாங்கி கொண்டு எங்களை சேர்க்க மறுப்பதாக, அந்த மனுவில் கோரப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதி, ‘ இவர்கள் செய்தது மன்னிக்க முடியாத குற்றம், அதற்காக, இவர்களை படிக்க விடாமல் நிறுத்தி வைக்கவும் முடியாது. ஆதாலால், இந்த மாணவர்களை, விருதுநகரில் உள்ள பெருந்தலைவர் காமராஜரின் இல்லத்தினை காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை சுத்தம் செய்துவிட்டு, பின்னர், மது விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, காமராஜரின் நினைவிடத்திற்கு சென்று விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் எனவும், அதனை, அந்த கல்லூரி உதவி பேராசிரியர் ஒருவர் மேற்பார்வையிட்டு, கல்லூரி தலைமை பேராசிரியரிடம் அறிக்கையாக சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.