போதைப்பொருள் நடமாட்டம்., காவல்துறைக்கு தெரியுமா.? தெரியாதா.? உயர்நீதிமன்றம் சரமாரி கேள்வி.!

தமிழ்நாட்டில் பெரும்பாலான இடங்களில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல் துறையினருக்கு தெரியுமா? என்று சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது .

Madras High court

சென்னை : பெரும்பாக்கம், துரைப்பாக்கம் பகுதி குடிசை மாற்றுவாரிய கட்டடப் பகுதிகளில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டும் என கோரப்பட்ட வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி அமர்வு முன்னர் விசாரணைக்கு வந்தது.

அப்போது, சட்ட ஒழுங்கு, போதைப்பொருள் நடமாட்டம் குறித்து பல்வேறு கேள்விகளை நீதிபதிகள் எழுப்பினர். தமிழ்நாட்டில் போதைப்பொருட்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பது காவல்துறைக்கு தெரியுமா.? தெரியாதா.? பெரும்பாலான இடங்களில் போதைப் பொருட்கள் தாராளமாக கிடைப்பது காவல் துறையினருக்கு தெரியுமா? என்று கேள்வி எழுப்பினர்.

மேலும், போதைப் பொருட்கள் நடமாட்டத்தை தடுக்க, அது தொடர்பான வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? இல்லை இந்த வழக்குகளை சுதந்திரமாக விசாரிக்க தனி ஒரு அமைப்பின் வசம் இதனை ஒப்படைக்கலாமா? என்றும் கடுமையாக தங்கள் கருத்துக்களை நீதிபதிகள் பதிவிட்டனர்.

அதற்கு பதில் அளித்த தமிழ்நாடு காவல்துறை தரப்பு, சென்னை பெரும்பாக்கம் பகுதியில் போதைப்பொருள் கடத்தல் போன்றவை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது என்றும், அதன் காரணமாக கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் குற்றங்களின் எண்ணிக்கை என்பது குறைந்துள்ளது என்று பதில் அளித்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்