கள்ள சந்தையில் விற்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும் மருந்து!
கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் தற்காலிகமாக பயன்படுத்தப்படும் மருந்து ஏஜெண்டுகள் மூலம் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுவதை அரசு கடுமையாக கண்டித்து எச்சரித்துள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டேதான் செல்கிறது. இதுவரை 1.77 கோடி பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் பல லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தும் உள்ளனர். இந்நிலையில் இந்த வைரசுக்கு இதுவரை தடுப்பு மருந்து அல்லது சிகிச்சை மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், தற்போது தற்காலிகமாக வைரஸ் எதிர்ப்பு மருந்தாகிய ரெம்டேசிவிர் என்னும் மருந்தை வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிற.
இந்த மருந்து ஒருகுப்பி 3,500 ரூபாய் என்ற மதிப்பில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் அரசு மருத்துவமனைகளில் போதுமான அளவு இந்த மருந்து இருந்தாலும், தனியார் மருத்துவமனைகளில் மிக குறைவான அளவே உள்ளது. எனவே தனியார் மருத்துவமனை நிர்வாகங்களை வாடிக்கையாளர்களாக கொண்டு சில ஏஜென்டுகள் இந்த மருந்துகளுக்கு மேலும் மூன்று மடங்கு விலை ஏற்றி கள்ளச் சந்தைகளில் விற்பனை செய்வதாக கூறப்படுகிறது. இது குறித்து மருந்து கட்டுப்பாட்டு துறையினர் கூறும் பொழுது அப்படி இதுவரை எங்களுக்கு எந்த ஒரு புகாரும் வரவில்லை அவ்வாறு நடந்தால் நிச்சயம் அரசு நடவடிக்கை எடுக்கும் என கூறியுள்ளானர்.
ஆனால் மதுரை, திருச்சி ஆகிய இடங்களில் உள்ள தனியார் மருத்துவமனைகளில் இது சில ஏஜென்டுகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது என்பது தெரியவந்துள்ளது. தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த மருந்து கிடைப்பதற்கு அரசு தகுந்த வழிமுறைகளை மேற்கொள்ளும் எனவும், இதுபோன்று கள்ளச்சந்தையில் மருந்து விற்கப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால் நிச்சயம் அரசு கடும் நடவடிக்கை எடுக்கும் எனவும் சுகாதாரத்துறை முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.