சென்னை சென்ட்ரல் ரயில்நிலையம் அருகே நேற்று இரவு பூக்கடை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்க்கு இனமான வகையில் அந்த பகுதியில் 3 பேர் நின்றுகொண்டிருந்தனர். அவர்களை விசாரிக்க சென்றபோது ஒருவர் தப்பி ஓடிவிட்டார். மற்ற இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் 240 போதை மாத்திரை இருந்தது தெரியவந்தது. இவர்கள் தனியார் கல்லூரி மாணவர்கள்ஆவர். இவர்களின் பெயர் நவீன், அரிகிருஷ்ணன் என்பதும் ஆந்திர மாநிலம் நெல்லூரில் போதை மாத்திரை வாங்கி ரயில் மூலம் சென்னை கொண்டு வந்தது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் இவர்கள் இருவரும், கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்ய போதை மாத்திரைகளை கடத்தி வந்தார்களா? அல்லது இவர்களே பயன்படுத்த வாங்கி வந்தார்களா? இவர்களுக்கும் போதை கடத்தல் கும்பலுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…

சென்னை :கல்யாண வீட்டு ஸ்டைலில் மொச்சை பயிறு கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம்.…
சென்னை : அடுத்த ஆண்டு பொங்கல் விருந்தாக அஜித்குமார் நடித்துள்ள "விடாமுற்சி" படம் வெளியாகவிருக்கிறது. படம் வெளியாக இன்னும் சில…
மெல்போர்ன் : ஆஸ்ரேலியாவுக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. இதில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன்…