ரயிலுக்கு அடியில் படுத்துறங்கிய போதை ஆசாமி…! ரயில் நிலையத்தில் பரபரப்பு…!
ரயிலுக்கு அடியில் படுத்துறங்கிய போதை ஆசாமியை போராடி வெளியேற்றிய ரயில்வே ஊழியர்கள்.
மேட்டுப்பாளையம் மற்றும் கோவை இடையே தினசரி பயணிகள் ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், நேற்று கோவையிலிருந்து மேட்டுப்பாளையம் நோக்கி பயணிகள் ரயில் வந்து கொண்டிருந்தது. அப்போது துடியலூர் ரயில் நிலையத்தில் நின்று, ரயில் மீண்டும் புறப்பட ஆயத்தமானது.
இந்நிலையில் சிலர் திடீரென ரயிலை நிறுத்துமாறு கூச்சலிட்டனர். அப்போது ரயிலில் இருந்து பயணிகள் இறங்கி சென்று தண்டவாளத்தை பார்த்த போது ரயிலின் 5 பெட்டிகள் அடியில் அதிகமான போதையில் மது அருந்திய ஒருவர் படுத்து இருப்பதை கண்டனர். இதனையடுத்து ரயில்வே ஊழியர் ஒருவர் ரயிலடியில் படுத்திருந்த நபரை போராடி வெளியேற்றினார். இந்த சம்பவம் துடியலூர் ரயில் நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.