சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் பறக்க தடை..!

Default Image

சென்னையில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா இதர வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை

சென்னையில் இன்று முதல் பிப்ரவரி இரண்டாம் தேதி வரை, சென்னை ஐ.ஐ.டி., ஆராய்ச்சி பூங்கா வளாகத்தில் மூன்று நாட்கள் ஜி-20 கல்வி செயற்குழு மாநாடு கூட்டங்கள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில், 29 வெளிநாடுகள் மற்றும் 15 பன்னாட்டு நிறுவனங்களின் பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர்.

g20indiaallpartymeeting

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் தலைவர்கள், சென்னையில் சில முக்கிய ஹோட்டல்களில் தங்குகின்றனர். இதனையடுத்து சென்னையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

அந்த வகையில், பிரதிநிதிகள் செல்லும் வழித்தடங்கள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதோடு, இந்த எல்லைப் பகுதியில் 3 நாட்களுக்கு ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா இதர வான்வழி வாகனங்கள் பறப்பதற்கு தடை விதித்து சென்னை போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்