தமிழ்நாடு காவல்துறையில் “டிரோன் போலீஸ்” பிரிவு! தொடங்கி வைத்தார் டிஜிபி!

Drone Police Unit

தமிழ்நாடு காவல்துறையில் டிரோன் போலீஸ் பிரிவை சென்னையில் தொடங்கி வைத்தார் டிஜிபி சைலேந்திரபாபு.

சென்னை பெருநகர காவல்துறையில் புதிதாக தொடங்கப்பட்டுள்ள ட்ரோன் காவல் பிரிவை டி.ஜி.பி. சைலேந்திர பாபு தொடங்கி வைத்தார். இந்தியாவிலேயே முன்னோடி திட்டமாக காவல்துறையில் டிரோன் போலீஸ் பிரிவு உருவாக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கொண்ட டிரோன்கள் காவல் கட்டுப்பாட்டு அறையின் மூலம் இணைக்கப்படுகின்றன.

இதனால் டிரோன்களை 5 கி.மீ தொலைவு வரை காவல் கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்க முடியும் என்றுள்ளனர். ரூ.3.6 கோடி மதிப்பில் உருவாக்கப்பட்டுள்ள இப்பிரிவு போக்குவரத்து நெரிசலை கண்டறிந்து உடனே சரிசெய்யவும், குற்றச்செயல்களை தடுக்கவும், பண்டிகை காலங்களில் கூட்டத்தை கட்டுப்படுத்தவும் மற்றும் கூட்டம் நிறைந்த இடங்களில் கண்காணிப்பு மேற்கொள்வது உள்ளிட பல்வேறு பணிகளை ட்ரோன் காவல் பிரிவு மேற்கொள்ள உள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்